;
Athirady Tamil News

பப்புவா நியூ கினியாவில் இன்று 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்..!!

0

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நியூ பிரிட்டன் தீவில் இன்று 6.6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அடிக்கடி நிலநடுக்கங்களை சந்தித்துவரும் பப்புவா நியூ கினியா நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு நூற்றுக்கும் அதிகமான மக்கள் பலியாகினர், பலகோடி மதிப்பிலான சொத்துகள் சேதம் அடைந்தன.

இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டின் நியூ பிரிட்டன் தீவில் உள்ள ரபாவுல் என்ற நகரின் மேற்கே சுமார் 180 கிலோமீட்டர் தூரத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவான இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.6 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 2 =

*