;
Athirady Tamil News

பொய்யான செய்திகளை வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை- மலேசியாவில் சட்ட மசோதா தாக்கல்..!!

0

மலேசியாவில் பொய்யான செய்திகளை சமூக ஊடகங்கள் மற்றும் மீடியாக்கள் மூலம் வெளியிடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என புதிய மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை பிரதமர் நஜப் ரசாக் அரசு சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. பொய்யான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் மக்களின் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்தை தெரிவிக்கும் உரிமை பாதுக்காக்கப்படும்.

பொய்யான செய்தி என்பது செய்தி, தகவல், அறிக்கை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது வீடியோ மற்றும் ஆடியோவாக இருக்கலாம்.

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்கள் வெளியிடும் செய்தி மலேசியர்களை பாதிக்கும் எனில் அவர்களும் இந்த சட்டத்தின் படி தண்டிக்கப்படுவர். இதன் பின் பொதுமக்கள் மிகவும் கவனத்துடனும், பொறுப்புடனும் செய்திகளை பதிவு செய்வார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 + 10 =

*