;
Athirady Tamil News

ஜெயலலிதாவை போல் சட்டப்போராட்டம் நடத்துவோம்- தினகரன் ஆவேச பேச்சு..!!

0

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தஞ்சை திலகர் திடலில் டி.டி.வி. தினகரன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

காலையில் தொடங்கிய உண்ணாவிரத போராட்டத்தை உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், தினகரனிடம் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார்.

முன்னதாக உண்ணாவிரத போராட்டத்தில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் காலம் தாழ்த்தி விவசாயிகளை ஏமாற்றி வருகிறது. கர்நாடக தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நாடகம் ஆடுகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை நீதிமன்றத்தின் மூலம் அரசிதழில் வெளியிட செய்தவர் ஜெயலலிதா. அதற்காக அவருக்கு தஞ்சையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய ஜெயலலிதா, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்பதால் தான் நீதிமன்றம் மூலம் சட்ட போராட்டம் நடத்தி காவிரி நடுவர் மன்ற இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தேன்.

இனி காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறைக்குழு அமைக்காவிட்டால் நீதிமன்றம் மூலம் போராடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பேன் என்றார். அதே போல வருகிற 29-ந்தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், ஜெயலலிதாவை போல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசி சுப்ரீம் கோர்ட்டு மூலம் காவிரி மேலாண்மை வாரியம் சட்டப்படி அமைக்க போராடுவோம்.

கர்நாடகம் என்றைக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டது கிடையாது. 7½ கோடி மக்களின் நலனை புறக்கணித்து குழுவை மத்திய அரசு அமைத்திருப்பது கண்துடைப்பு. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. ஜெயலலிதாவால் வெற்றிபெற்ற 37 எம்.பி.க்களும் பதவியில் இருந்தால் போதும் என செயல்படுகிறார்கள். அவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜெயலலிதா உழைப்பால்வெற்றி பெற்ற அவர்கள் வருகிற தேர்தலில் டெபாசிட் இழப்பார்கள்.

காவிரி, முல்லைப்பெரியாறு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், எண்ணெய்எரிவாயு, கூடங்குளம், ஸ்டெர்லைட், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் திட்டம் என மக்கள் வாழ்வாதாரத்துக்கு எதிராக, நலனுக்கு எதிராக எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்த்து, விவசாயிகள், மக்களுடன் தோளாக தோள் நின்று போராடுவோம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*