;
Athirady Tamil News

வாழச்சிறந்த நகரங்களின் பட்டியலில் கீழிறங்கிய பாரிஸ்! காரணம் என்ன?..!!

0

Mercer என்னும் அமைப்பு நடத்திய உலகளவில் வாழச்சிறந்த நகரங்களின் பட்டியலில் பாரீஸால் 39ஆவது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது.

2015ஆம் ஆண்டில் தரவரிசைப்பட்டியலில் 27ஆவது இடத்தில் இருந்த பாரீஸ் 2016இல் திடுமென 39ஆவது இடத்திற்கு சறுக்கியதற்கு முக்கிய காரணம், அங்கு நடந்த இரண்டு குண்டு வெடிப்புகள்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 பேரும் நவம்பர் மாதம் 130 பேரும் பாரீஸ் குண்டு வெடிப்புகளில் கொல்லப்பட்டனர்.

இன்னொரு காரணம், குப்பைகள். ஆம் சுற்றுலாவுக்கு பெயர் போன பாரீஸ் சுத்தத்திற்காக 67ஆவது இடத்தைப் பிடித்துள்ளது

இதனால் பாரீஸின் மேயரான Anne Hidalgo, நகரை சுத்தமாக வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

புகைத்த சிகரெட்டுகளையும் குப்பைகளையும் போடுவோருக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

பாரீஸை சுத்தமான நகரமாக மாற்றுவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 34,000 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பாரீஸை சுத்தம் செய்வதற்காக ஆண்டொன்றுக்கு 500 மில்லியன் யூரோக்களை செலவளிக்கிறோம்.

இது இப்படியே தொடர முடியாது என்று கூறும் மேயர், அசுத்தமாக்கினால் தண்டிக்கப்படுவார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

39 ஆவது இடத்தைப் பிடித்திருந்தாலும் பாரீஸ் மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி. அது லண்டனும் மற்ற ஐரோப்பிய நகரங்களான Barcelona மற்றும் Madridம் தங்களைவிட மோசமான இடத்தில் இருப்பதுதான்.

பட்டியலில் மேலே உள்ள நகரங்கள் பாரீஸைவிட சிறிய நகரங்கள் என்பதும் அவை அதிகப் புள்ளிகளைப் பெற ஒரு முக்கியமான காரணமாகும்.

பாரீஸில் வாழ்க்கைத்தரம் இன்னும் மிக உயர்வாகத்தான் உள்ளது என்று கூறும் Mercerஇன் செய்தித் தொடர்பாளர் Mags Andersen, பிற விடயங்களில் அது தரமாகவே உள்ளதாகத் தெரிவித்தார்.

பல சர்வதேச மற்றும் தனியார் பள்ளிகள், மிகச்சிறந்த நுகர்வோர் பொருள் வசதிகள் மற்றும் பல்வேறு வகை பொழுதுபோக்கு அம்சங்கள் பாரீஸில் உள்ளன.

என்றாலும் லண்டனைவிட போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசு ஆகிய விடயங்களில் பாரீஸுக்கு குறைந்த மதிப்பெண்கள்தான் என்கிறார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*