;
Athirady Tamil News

999 அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுக்கும் பிரித்தானிய பொலிசார்: ஆய்வில் அம்பலம்..!!

0

பிரித்தானியாவில் 999 அவசர அழைப்புகளுக்கு பதிலளிக்க பொலிசார் பல நாட்களை எடுத்துக் கொள்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பிரித்தானியாவில் 999 அவசர அழைப்புகளுக்கு ஒரு மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்பது நியதி.

ஆனால் தற்போதைய சூழலில் அதிக பணிச்சுமை காரணமாக பொலிசார் பல மணி நேரங்கள் முதல் நாட் கணக்கில் எடுத்துக் கொள்கின்றனர்.

மட்டுமின்றி குற்றச் செயல்கள் தொடர்பில் வரும் அவசர அழைப்புகளை பொலிசார் கண்டு கொள்வதில்லை எனவும் தெரிய வந்துள்ளது.

மேலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதி பொலிசாரில் நான்கில் ஒருபகுதி பேர், அதிக பணிச்சுமையால் தத்தளிப்பதாகவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி குறிப்பிட்ட அழைப்புகளை ஏற்று சம்பவப்பகுதிக்கு விரையும் பொலிஸ் உதவிக்குழுவினர் 20ல் இருந்து 50 சதவிகிதம் சம்பவம் நடந்த பகுதிக்கே செல்வதில்லை எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

999 அழைப்புகளுக்கு பதில் வரும் என பொதுமக்கள் பல மணிநேரம் காத்திருக்க வைக்கும் நிகழ்வுகளும் பிரித்தானியாவில் அரங்கேறியுள்ளது.

இருப்பினும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பிரித்தானிய பொலிசார் கருத்துடன் செயல்படுவதாகவும் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 7 =

*