;
Athirady Tamil News

ரஷிய வணிக வளாக தீ விபத்து – இந்திய தூதரகம் இரங்கல்..!!

0

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ரஷிய வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ரஷியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பங்கஜ் சரண் டுவிட்டரில் கூறுகையில், கெம்ரோவோ மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − eight =

*