;
Athirady Tamil News

பத்திரிகையாளர் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை – சிவராஜ் சிங் சவுகான்..!!

0

மத்திய பிரதேசம் மாநிலம் பிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தீப் சர்மா (35). டிவி சேனலில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

சந்தீப் சேகரித்த மணல் கொள்ளை குறித்த செய்தி டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து, மணல் கொள்ளை கும்பலிடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக சந்தீப் போலீசாரிடம் புகார் அளித்தார்.

இதற்கிடையே, கடந்த ஞாயிறன்று பைக்கில் சென்ற சந்தீப் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் அவர் உடல் நசுங்கி இறந்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லாரி டிரைவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பத்திரிகையாளர் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்துள்ளார்.

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு தான் எங்கள் முக்கிய நோக்கம். சந்தீப் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − three =

*