;
Athirady Tamil News

சித்தராமையா கையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கடிகாரம் – அமித்ஷா குற்றச்சாட்டு..!!

0

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 26-ம் தேதி முதல் 31-ம் தேதிவரை சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தும்கூர், சித்ரதுர்காம், தவானகெரே, ஷிவ்மோகா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

அதன்பின்னர், மைசூரு, சாம்ராஜ்நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும் அவர் அங்குள்ள வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளார்.

இந்நிலையில், கர்நாடகாவின் ஷிமோகாவில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷா பேசுகையில், சமூக சீர்திருத்தவாதியான சித்தராமையா கைகளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடிகாரம் கட்டியது எப்படி என கேள்வி எழுப்பினார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், எத்தனை பேர் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் வாட்ச் கட்டியுள்ளார்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். சமூக சீர்திருத்தவாதியான சித்த ராமையா தனது கைகளில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான கடிகாரத்தை கட்டியுள்ளார். அவர் ஊழல் செய்துள்ளதை வெளிக்காட்ட இது ஒன்று மட்டுமே போதும்.

கர்நாடகாவில் மோடி அலை வீசப்போகிறது என ஏற்கனவே கூறியிருந்தேன். ஆனால் அது தவறு. பா.ஜ.க. எனும் சுனாமி இங்கு ஆட்சி செய்யும் காங்கிரசை சுருட்டி வீசவுள்ளது. எனவே, கர்நாடகாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். முதல் மந்திரியாக எடியூரப்பா பொறுப்பேற்பார்.

ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள ஆங்கிலேயர்களை போல் காங்கிரஸ் முதல் மந்திரி சித்தராமையா பிரித்தாளும் கொள்கையை கடைப்பிடித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களது தற்கொலைகளுக்கு யார் பொறுப்பு ஏற்பது? என கேள்வி எழுப்பினார். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − seven =

*