;
Athirady Tamil News

பருத்தித்துறை நகரசபையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு- ஈ.பி.டி.பி கூட்டணி கைப்பற்றியுள்ளது..!! (படங்கள்)

0

பருத்தித்துறை நகரசபையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு- ஈ.பி.டி.பி கூட்டணி கைப்பற்றியுள்ளது.

அங்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும், கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி 2 ஆசனங்களையும், சுயேட்சை, தமிழர் விடுதலை கூட்டணி தலா ஒவ்வொரு ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தன.

இன்று கூட்ட ஆரம்பத்தில் இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என்ற சர்சை தோன்றியபோது, பகிரங்க வாக்கெடுப்பிற்கே அதிக வாக்குகள் விழுந்தன. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இருதராஜ், தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் கோகிலகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி கூட்டணியின் 7 வாக்குகள் இருதராஜ் பெற்றார். முன்னணிக்கு 6 வாக்குகள் கிடைத்தன.

தமிழ் விடுதலை கூட்டணி, சுயேட்சை அணிகள் நடுநிலை வகித்தன.

இதன்பின் உபதவிசாளர் தெரிவு நடந்தது. இதற்கும் வாக்கெடுப்பு நடந்தது. இதில் த.தே.கூட்டமைப்பின் வதனி தெரிவானார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − twelve =

*