;
Athirady Tamil News

வவுனியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை அச்சுறுத்திய காப்புறுதி நிறுவன ஊழியர்..!! (படங்கள்)

0

வவுனியா இரண்டாம் குறுக்கு தெரு வீதியில் அமைந்துள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் நேற்று (26.03.2018) இரவு கண்ணாடியுடைத்து திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடோன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை அச்சுருத்தும் வகையில் அங்கிருந்த உத்தியோகத்தர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து ஏன் புகைப்படம் எடுக்கின்றீர்கள் என ஊடகவியலாளர் வினாவிய போது தலமைக்காரியாலயத்தினால் யார் வந்தது என கேட்டார்கள் அதனால் புகைப்படம் எடுத்தேன் என தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர் கருத்து தெரிவிக்கையில் ,

நான் அங்கு சென்று நடந்தவற்றை வினாவிய போது அவர் தற்போது புகைப்படம் எடுக்க முடியாது என தெரிவித்தார். இதனையடுத்து நான் வெளியேற முற்பட்ட சமயத்திலிலேயே என்னை புகைப்படம் எடுத்தார். என்னை நான் ஊடகவியலாளர் என அடையாளபடுத்தியிருந்தேன் . சந்தேகம் இருந்தால் எனது அடையாள அட்டையினை தருமாறு வினாவியிருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடு என்னை அச்சுருத்தும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + twenty =

*