;
Athirady Tamil News

ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு காரில் 60 கிலோ கஞ்சா கடத்தல்..!!

0

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கீழுர் அங்கன்வாடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாலக்காட்டில் இருந்து மலப்புரத்துக்கு ஒரு கார் வேகமாக வந்தது.

அதனை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரின் பின்புற டிக்கியில் ரகசிய அறை அமைக்கப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்த போலீசார் டிக்கியை திறந்து பார்த்தனர்.

அப்போது ரகசிய அறையில் 60 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ. 70 லட்சம் ஆகும்.

கஞ்சா கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த சீனிவாசன் (40). நாகதேவி (32), கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்த அகில் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சாவை ஆந்திராவில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்திற்கு விற்பனைக்காக கடத்தி வந்ததாக கைதான நாக தேவி கூறினார்.

கைது செய்யப்பபட்ட 3 பேரும் கீழூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six + sixteen =

*