;
Athirady Tamil News

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை – தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்..!!

0

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் மே 12-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் இன்று அறிவித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தலைமை தேர்தல் ஆணையர், கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும் தொடர்பு இல்லை என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தடையில்லை என்றும் தெரிவித்தார்.

‘தேர்தல் நடத்தை விதிகள் நீதிமன்ற தீர்ப்புக்கு பொருந்தாது. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் தேர்தல் ஆணையம் குறுக்கிடாது’ என்றும் அவர் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தேர்தல் ஆணையர் தெளிவாக கூறியிருப்பதால், இனி மத்திய அரசின் கையில்தான் முடிவு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − five =

*