;
Athirady Tamil News

வறுமை காரணமாகவே பலர் புலிகளில் இணைந்தார்கள்: கஜேந்திரகுமார்..!!

0

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் வறுமை காரணமாகவே சிறுவர்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டதாகவும்,

பதினெட்டு வயது வரை வளர்ந்த பின்னர் அவர்களை விடுதலைப் புலிகள் போருக்கு அனுப்புவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஐநாவின் பக்க நிகழ்வுக் கூட்டம் ஒன்றில் குழந்தைப் போராளிகள் தொடர்பாக கஜேந்திரகுமார் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்த நிலையில் அவ்விடயம் தொடர்பாக கஜேந்திரகுமார் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அவ்விளக்கத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த சிறார்களில் பெரும்பான்மையானவர்கள் வறுமையாலேயே இணைந்ததாகவும்,இன்னும் சிலரை விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் சிறுவர்கள் என்று தெரிந்தும் அவர்களுடைய வயதை மறைத்து வலுக்கட்டாயமாக அமைப்பில் இணைத்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 7 =

*