;
Athirady Tamil News

வவுனியாவில் பட்டாரக வாகனம் தடம்புரண்டு விபத்து! இருவர் படுகாயம்..!! (படங்கள்)

0

வவுனியா ஓமந்தையில் பட்டாரக வாகனமோன்று இன்று (27.03.2018) மாலை 5.00 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு பேருவலை நோக்கி மீன்களை ஏற்றிக்கொண்டு சென்ற பட்டாரக வாகனம் வவுனியா ஓமந்தை பாலத்திற்கு அருகே ரயர் வெடித்து சாரதியின் கட்டுப்பாட்டை மீறி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 17 =

*