;
Athirady Tamil News

மகிந்த, கோடபாய, சரத் பொன்சேகா கொலை முயற்சி வழக்கில் எதிரிகள் விடுதலை -சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா..!! (இணைப்பு செய்தி)

0

முன்னாள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு செயளாளர் கோடபாய ராஜபக்ச இரானுத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்ய 2009 ம் ஆண்டு சதித்திட்டம் தீட்டியதாக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றில் 2011ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் எதிரிகள் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவின் வாதத்தையடுத்து மேல்நீதிமன்ற நீதிபதி இன்று விடுதலை செய்தார்.

2009 ம் ஆண்டு பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட கனகரத்தினம் ஆதித்தன் கந்தவனம் கோகுல்நாதன் ஆகிய இருவருக்கும் எதிராக, எதிரிகளால் வழக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் 13 சாட்சியங்களை அரச சாட்சிகளான குறிப்பிட்டு 2009 ஆண்டு சுதந்திர தின விழாவிலும், தியத்தலாவ இராணுவ முகாமிலும் மேற்குறிப்பிட்ட அரசியல் பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்றில் 1ஆம் எதிரியால் வழக்கப்பட்டகுற்ற ஒப்புதல் வாக்குமூல்ம் சுயமாக வழங்கப்பட்டதாக தீர்ப்ப வழங்கியதையடுத்து அரச சட்டத்தரணி எதிரி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நீருபிக்கவும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மைத்தமையையும் நம்பகத்தன்மையையும், உறுதிப்படுத்தவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயளாளர் கோடபாய ராஜபக்ச, இரானுத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரின் மெய்ப்பாதுகாலர்களை அழைத்து சாட்சியங்களை நெறிப்படுத்தி அரச தரப்பு சட்டத்தரணி வழக்கை நிறைவு செய்து; முடித்துக் கொண்ட பின்னர்…

இவ்வழக்கின் எதிரிகள் தரப்பில் ஆஜரான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா தனது வாதத்தில்

1) எதிரியால் வழக்கப்பட்ட குற்ற ஒப்பதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதென் இந்த வழக்கில் எதிரிக்கு எதிரான சான்றாக நீதிமன்றம ஏற்றுக் கொண்டுள்ளதெனினும் குற்றஒப்புதல் வாக்கு மூலத்தில் சொல்லப்பட்ட சம்பவங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக எந்தவிதமான சுயாதீன சான்றுகளையும் அரச தரப்பால் முன்வைக்கவில்லை,

2) இந்த வழக்கில் அரசியல் பிரமுகர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக எதிகள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் எதிரிகள் ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்றோ அல்லது இருவருக்கும் இடையே சதி செய்வதற்கு எழுத்து மூலமாகவோ அல்லது வாய்மொழி மூலமாவோ உடன்பாடு இருந்ததென்றோ எந்தவிதமான சான்றுகளையும் அரச தரப்பு நிருபிக்கவில்லை

3) எதிரியால் வழக்கப்பட்ட குற்ற ஒப்பதல் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றதாக பொலிஸ்.விசாரணையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஆனால் இந்த வழக்கில் பொலிசார் எந்தவிதமான விசாரணைகளை மேற்கொண்டதற்கான சான்னுகள் நீதிமன்றின முன் கொண்டு வரப்படவுமில்லையென்பதுடன், எந்த விசாரணை அதிகாரிகளும் சாட்சியம் அளிக்கவும் இல்லை என்பதை இந்த நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன் எதிரிகளின் மீது சுமத்தபபட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நீருபிக்கத் தவறியுள்ளது என்பதையும் கனம்நீதிமன்றம் கவனத்தில் கொண்டு எதிரிகளை விடுதலை செய்யமாறு தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

அரச தரப்பினதும் எதிரிகள் தரப்பினதும் வாதபிரதிவாதங்களை செவிமடுத்த மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேயகோன் இற்றைய தினம் தனது தீர்ப்பில் எதிரிதரப்பு வாதத்தை கவனத்தில் கொண்டு பிரமுகர்களை கொலை செய்ய எதிரிகள் சதித்திட்டம் தீட்டியதாக அரச தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை அரச தரப்பு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிருபிக்க தவறியுள்ளமையால் எதிரிகளை விடுதலை செய்தார்.

அரச தரப்பில் அரச சட்டத்தரணி நயனா செனவிரத்னவும், எதிரி தரப்பில்சட்டத்தரணி செல்வி தர்மஜா தர்மராஜாவின் அணுசணையில், சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜரானார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*