;
Athirady Tamil News

உ.பி.யில் வீடு தீப்பிடித்து 3 குழந்தைகள் உயிரிழப்பு..!!

0

உத்தர பிரதேச மாநிலம் சோனிபத்ரா மாவட்டம் தெண்டு கிராமத்தில் நேற்று இரவு கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது தீப்பிடித்ததால் சிறிது நேரம் கழித்தே தீயின் தாக்கத்தை உணர்ந்தனர். அந்த வீட்டில் வசித்த பெண், தன் குழந்தைகளைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். ஒரு குழந்தையை காப்பாற்றி வெளியே கொண்டு வந்துள்ளார்.

அதன்பின்னர் உள்ளே செல்ல முடியாதபடி தீ கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால், வீட்டுக்குள் சிக்கிய மூன்று குழந்தைகள் உடல் கருகி இறந்துவிட்டனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + two =

*