;
Athirady Tamil News

ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு..!!

0

மத்திய நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி, கடந்த 2017-18-ல் கொண்டு வந்த திருத்தத்தின்படி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, ஆதார் எண்ணையும் குறிப்பிடுவது கட்டாயமாகிறது. அதாவது, பான் எண்ணையும் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும்.

இதன் மூலம், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்து, வரி ஏய்ப்பு செய்வதைத் தடுப்பது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே, பான் எண் வைத்திருப்போர் அனைவரும், தங்கள் ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும்” என்று மத்திய வருவாய்த்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆதார் அட்டைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் உள்ளதா? என்பது தொடர்பான பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.

இதனால், ஆதார் எண்ணுடன் வருமான வரி பான் கார்டை இணைக்கும் கடைசி தேதி 31-7-2017, 31-8-2017, 31-12-2017 என மூன்று முறை நீட்டிக்கப்பட்டிருந்தது. கடைசியாக 31-3-2018 வரை தேதி நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதற்கிடையில், 5-3-2018 நிலவரப்படி வருமான வரித்துறையில் நிரந்தர கணக்கு வைத்துள்ள சுமார் 33 கோடி மக்களில் 16.65 கோடி பேர் தங்களது பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர்.

இந்நிலையில், வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (PAN) ஆதார் எண்ணுடன் இணைக்கும் தேதியை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் இன்று உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*