;
Athirady Tamil News

புத்தளம் நகரசபைக்கான நகரபிதா தெரிவு..!!

0

புத்தளம் நகர சபையின் நகரபிதா மற்றும் பிரதி நகரபிதா தெரிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றன.

குறித்த நிகழ்வு வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜே.எம்.ஆர்.பீ.ஜயசிங்க தலைமையில் புத்தளம் நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற அலி சப்ரிக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கே.ஏ.பாயிசிற்கும் இடையில் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஏ.பாயிஸ் 11 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட அலி சப்ரி 07 வாக்குகளையும் பெற்றனர்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.ஏ.பாயிஸ் 4 மேலதிக வாக்குகளினால் நகரபிதாவாக தெரிவு செய்யப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − eight =

*