;
Athirady Tamil News

கொழும்பு மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி. பொலிஸார் விசாரணை..!!

0

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரூவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

மாளிகாவத்தையில் உள்ள, அலாமா இக்பால் மாவத்தையில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். அதேவேளை மோட்டார் சைக்களில் சென்ற இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், பாதாள உலககுழுவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்தனர். 25 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்ததாகவும் சடலம் தற்போதும் சம்பவம் இடம்பெற்ற வீதியில் கிடப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணை நடத்திய பின்னரே, சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் கொழும்பில், இந்த மார்ச் மாதத்தில் இடம்பெற்ற நான்காவது துபாக்கிச் சுட்டுச் சம்வபம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*