;
Athirady Tamil News

புடவை அணிந்து உணவகம் சென்ற தமிழ் பெண்ணுக்கு பொலிஸாரால் நேர்ந்த சங்கடம்..!!

0

கணவருடன் உணவகம் ஒன்றுக்கு சென்று உணவருந்தி கொண்டிருந்த போது, அங்கு வந்த பொலிஸார் குறித்த பெண்ணை உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அச்சுறுத்தியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

அங்கு சென்ற தமிழ் தம்பதிகளை கடை உரிமையாளர் சற்று வித்தியாசமாக பார்த்துள்ளார். இதைச் சற்றும் பொருட்படுத்தாமல் உள்ளே சென்று அவர்கள் உணவு உட்கொண்டிருந்த போது திடீரென பொலிஸார் அந்த உணவகத்துக்கு வந்துள்ளனர். கடை உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் அங்கு வந்து. உடனடியாகப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த பெண்ணை அச்சுறுத்தியுள்ளனர். நடப்பது ஒன்றும் அறியாமல் அதிர்ச்சிக்குள்ளாகிய கணவர் ஏன் எனது மனைவியை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கின்றீர்கள் என பொலிஸாரிடம் கேட்டுள்ளார்.

புடவை அணிந்து உணவகம் சென்ற தமிழ் பெண்ணுக்கு பொலிஸாரால் நேர்ந்த சங்கடம்!

அதற்கு உங்களின் மனைவி அணிந்திருக்கும் புடவை தான் என பொலிஸார் கூறியுள்ளனர். புடவையா? புடவையால் உங்களுக்கு என்ன பிரச்சினை எனக் கணவர் கேட்டுள்ளார். புடவை அணிவதால் ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் உங்கள் மனைவி அணிந்திருக்கும் புடவையில் புத்த பெருமானின் படங்கள் உள்ளன. இந்த செயல் மதத்தை நிந்திக்கும் செயலாகும் என்று பொலிஸார் தெரிவித்தனர். இதன் போதே தனது மனைவி அணிந்திருந்த புடவையை சற்று உற்று நோக்கியுள்ளார் கணவர். ஆனால் பொலிஸார் கூறிய வகையில் புத்த பெருமானின் புகைப்படம் அதில் இருக்கவில்லை. மாறாக அந்த புடவையில் பொம்மை படமே காணப்பட்டுள்ளது. அந்த படம் சற்று புத்த பெருமானை போன்று தென்பட்டுள்ளது.

எனினும் பொலிஸார் குறித்த பெண்ணை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புடவையை தம்மிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் கணவர் வீட்டுக்கு சென்று வேறு ஒரு உடையை எடுத்து வந்து தனது மனைவியிடம் கொடுத்து உடையை மாற்றுமாறு கோரியுள்ளார். பொலிஸ் நிலையத்தினுள் வைத்தே உடையை மாற்றிய பின்னர் புடவையை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பௌத்த மதத்தை நிந்திக்கும் வகையில் உடை அணிந்தார் என குற்றம் சுமத்தி நீதிமன்றில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தான் மதத்தை நிந்திக்கும் வகையில் செயற்படவில்லை. நான் அனைத்து மதத்தையும் மதிப்பவள். இலங்கையில் இவ்வாறான புடவைகளை அணியக் கூடாது எனத் தனக்கு தெரியாது. எனவே தனக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என குறித்த பெண் கூறியுள்ளார். எனினும் இதனைக் கேட்க மறுத்த பொலிஸார் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 10 =

*