;
Athirady Tamil News

நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் இணைக்கும் காலக்கெடுவை நீட்டிக்க முடியாது – சுப்ரீம் கோர்ட்..!!

0

அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு வங்கி கணக்குகள், கைபேசி எண், டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களில் ஆதார் எண்ணை இணைக்கும் தேதி இம்மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முடிவை எதிர்த்தும் காலக்கெடுவை நீட்டிக்க வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வில் இன்று தனிநபர் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரரின் சார்பில் ஆஜராகி வாதாடிய மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாத், ஆதார் எண் இணைப்பு 88 சதவீதம் அளவில் மட்டுமே முடிந்துள்ளது. காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் மீதமுள்ள 12 சதவீதம் மக்களால் (சுமார் 14 கோடி பேர்) அரசின் நலத்திட்ட உதவிகளை பெற இயலாமல் போகும் என குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆதார் அடையாள எண் முகமை வழக்கறிஞர் வங்கிகளில் 95 சதவீதம் மக்கள் தங்கள் ஆதார் எண்களை பதிவு செய்துள்ளதாகவும், தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் 97 சதவீதம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், தனிப்பட்ட லாபநோகத்துடன் கூடிய காரணங்களுக்காக அரசு ஆவணங்களுடன் 12 சதவீதம் பேர் ஆதார் எண்களை இணைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆதார் எண் அடையாளத்தை அடிப்படையாக வைத்து சுமார் 67 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இருதரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்ட நீதிபதிகள், அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை மார்ச் 31-க்கு மேல் நீட்டித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என திட்வட்டமாக தெரிவித்தனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + five =

*