;
Athirady Tamil News

விமானத்தில் பெண்ணுக்கு ஏற்பட்ட மாதவிடாய் வலி: நடுவழியில் இறக்கிவிடப்பட்ட கொடுமை..!!

0

விமானத்தில் உட்கார்ந்திருந்த பெண் பயணி மாதவிடாய் வலியால் கஷ்டப்பட்ட நிலையில், ஊழியர்களால் கீழே இறக்கிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அமீரக விமானம் ஒன்றில் 24 வயது இளம் பெண் தனது காதலருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாதவிடாய் வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமான பெண் ஊழியர்கள் அவரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது இது பொருத்து கொள்ளக்கூடிய வலி தான் எனவும் தான் சமாளித்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.

இதையடுத்து ஊழியர்கள் அந்த பெண் பயணிக்கு குடிக்க டீ அல்லது வலி நிவாரண மருந்து கொடுக்காமல் இருந்துள்ளனர்.

அதோடு விமானத்தை அடுத்த விமான நிலையத்தில் நிறுத்தி குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக இறக்கியுள்ளனர்.

பெண்ணிடம் இப்படி நடந்து கொண்ட விமான ஊழயர்களுக்கும் கண்டனம் எழுந்துள்ளது.

இது சம்மந்தமாக குறித்த விமான நிறுவனம் இன்னும் விளக்கமளிக்கவில்லை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*