;
Athirady Tamil News

பத்தொன்பதாம் நூற்றாண்டின் குற்றவாளியை நினைவுபடுத்தும் சுவிஸ் கள்ள நோட்டுகள்..!!

0

Valais பகுதியிலுள்ள Sion நகரில் நடைபெற்ற கார்னிவலை அடுத்து, வந்த வருவாயை தபால் நிலையத்தில் டெபாசிட் செய்யச் சென்ற வியாபாரிகள் கொண்டுவந்த பணத்தில் கள்ள நோட்டுக்கள் இருப்பதாக தபால் நிலைய ஊழியர்கள் கூறியதைக் கேட்டு வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

Valais பகுதியில் 100 ஃப்ராங்க் கள்ள நோட்டுக்கள் புழங்குவது இது முதல் முறையல்ல.

ஜனவரி மாதத்தில் Verbierஇலுள்ள Big Ben Pubஇன் உரிமையாளரும், Rarogneஇல் நிகழ்ச்சி ஒன்றின் அமைப்பாளர்களும் தங்களுக்கு வந்த பணத்தில் 100 ஃப்ராங்க் கள்ள நோட்டுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இருட்டான இடங்களிலும் கூட்டம் அதிகமான இடங்களிலும் பணம் புழங்கும்போது இதுபோல் கள்ள நோட்டுக்கள் புழங்குவது சகஜம் என்று பொலிசார் தெரிவித்தனர்.

சுவாரஸ்யமான நிகழ்வாக, தற்போதைய சம்பவங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இதேபோல் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட குற்றவாளியான Joseph-Samuel Farinet என்னும் இத்தாலி நாட்டவனை நினைவுபடுத்துகின்றன.

1869 Valais பகுதிக்கு வந்த Joseph, போலி 20 centime நாணயங்களை புழக்கத்தில் விடத் தொடங்கியிருக்கிறான்.

பொலிசார் அவனைத் தேடி வந்த நிலையில் தலை மறைவாக இருந்து கொண்டே தனக்கு உதவும் உள்ளூர் மக்களுக்கு இந்த போலி நாணயங்களை கொடுத்திருக்கிறான். அவனது பணத்தால் உதவி பெற்ற ஏழைக் குடும்பங்கள் பல அவனை ”ஆல்ப்ஸ் மலையின் ராபின் ஹூட்” என்றே அழைக்கும் அளவுக்கு அவன் புகழ் பெற்று விளங்கினான்.

பல ஆண்டுகளாக பொலிசுக்கு தண்ணி காட்டி வந்த அவனை 1880 ஆம் ஆண்டு பொலிசார் கண்டுபிடித்தனர். பொலிஸிடமிருந்து தப்பியோடும்போது அவன் Saillon கிராமத்தின் அருகிலுள்ள சிறு பள்ளத்தாக்கு வரை ஓடினான். பின்னர் அவன் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. அவன் எப்படி இறந்தான் என்பது இன்று வரை புதிராகவே உள்ளது.அவனைப் பற்றி நாவல்கள் எழுதப்பட்டன, ஒரு திரைப்படமும் எடுக்கப்பட்டது

Valais பகுதியின் அவனது பெயர் மிகவும் பிரபலம், எந்த அளவுக்கு என்றால், கடந்த ஆண்டு உள்ளூர் கரன்சி ஒன்றுக்கு அவனது பெயர் வைக்கப்படும் அளவுக்கு.

ஆனால் இந்த முறை கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டவர்கள் கொண்டாடப்படமாட்டார்கள் என்பது மட்டும் உறுதி

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 4 =

*