;
Athirady Tamil News

அம்மாவை ஏமாற்ற தூக்குமாட்டிய சிறுமிக்கு நேர்ந்த கதி..!!

0

அமெரிக்காவின் நியூயார்க்கில் அம்மாவை ஏமாற்றுவதற்காக தூக்கு போடுவதுபோல் நடித்த சிறுமி மூளைச்சாவு அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த Purity Baldwin என்பவரின் மகளான Precise Tucker (7) , விளையாட்டாக பெல்ட் ஒன்றைக் கழுத்தில் மாட்டிக் கொண்டு ஃப்ரிட்ஜில் உள்ள கைப்பிடியில் தூக்கில் தொங்குவதுபோல் நடிக்க முயன்றாள்.

அவள் சிப்ஸ் வேறு சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் சிப்ஸும் தொண்டையில் சிக்கிக் கொண்டது.

கிச்சனுக்குள் தற்செயலாக வந்த Precise Tuckerஇன் அண்ணன், தனது தங்கை மூச்சுத்திணறிக்கொண்டிருப்பதைக் கண்டு சத்தமிட்டான்.

சத்தம் கேட்டு அங்கு வந்த தாயார் ஆம்புலன்ஸை அழைத்துவிட்டு Precise Tuckerஐ மீட்டு அவளது தொண்டையில் சிக்கிக் கொண்ட சிப்ஸ்களை வெளியே எடுத்துவிட்டு அவளுக்கு முதலுதவி செய்திருக்கிறார்.

மருத்துவ உதவிக் குழுவினர் வந்து அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவளுக்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆனாலும் அவளது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.

மருத்துவர்கள் நேற்று அவள் மூளைச்சாவு அடைந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 4 =

*