;
Athirady Tamil News

திருமணமானவர்களுக்கும் இனி ஒரே வரிதான்: சுவிஸ் கூட்டாட்சி கவுன்சில் தீர்மானம்..!!

0

சுவிட்சர்லாந்தில் தம்பதிகளுக்கு விதிக்கப்பட்டு வந்த பிரத்யேக வரியில் சில மாற்றங்களை கொண்டுவர கூட்டாட்சி கவுன்சில் தீர்மானித்துள்ளது.

அதன்மூலம், திருமணமாகாமல் இணைந்து வாழ்பவர்களுக்கும் திருமணமானவர்களுக்கும் இனி ஒரே போல் வரி விதிக்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்தில் திருமணம் முடிந்த தம்பதிகளின் வருமானத்தை இணைத்து 10 சதவிகிதமாக வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த வரியால் மக்கள் அவதிப்பட்டு வருவதாக கடந்த 10 வருடங்களாக அதிருப்தி நிலவி வந்த நிலையில் 7 பேர் அடங்கிய கூட்டாட்சி கவுன்சில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

அதில், “தற்போது திருமணமாகாமல் இணைந்து வாழ்பவர்கள் தனி நபர் போல் கருதப்பட்டு அவர்களுக்கு தனிநபர் வரியும், திருமணம் ஆன தம்பதிகளுக்கும் அதே முறையில் வரி வசூலிக்கப்படும்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மூலம் தம்பதிகள் செலுத்தி வந்த வரியில் மாற்றம் ஏற்பட்டு குறையும் என்பது கூடுதல் சிறப்பு. தம்பதிகள் வரி மீதான குற்றச்சாட்டுகளுக்கு முடிவு கட்டும் வகையில் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் சுவிஸ் அரசாங்கத்திற்கு 1.5 பில்லியன் ஃப்ராங்குகள் இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, காலியாக உள்ள 15,000 ஊழியர்களுக்கான பணியிடங்கள் இதன்மூலம் நிரம்ப வாய்ப்பிருப்பதாக சுவிஸ் அரசாங்கம் கணித்துள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + ten =

*