;
Athirady Tamil News

பொது இடத்தில் கட்டி அணைக்கலாம்: மெர்க்கலுக்கு அனுமதி வழங்கிய அரச குடும்பம்..!!

0

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கலுக்கும் மே மாதம் 18 ஆம் திகதி திருமணம் நடக்கவிருக்கிறது.

ஒரு நடிகையான மெர்க்கல், 18 ஆம் திகதி முதல் அரசு குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறவிருப்பதால், தற்போது இருந்து அரசு குடும்பத்து பழக்கவழக்கங்களை பின்பற்றி வருகிறார்.

வெளிநாடுகளுக்கு சென்றால் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், மற்றவர்களிடம் எவ்வாறு பேச வேண்டும், எவ்வாறு ஆடை அணிவது, சாப்பிடுவது, எவ்வாறு நடப்பது என்பது போன்ற ராஜகுடும்பத்து பழக்கவழக்கங்களை பின்பற்றி வருகிறார்.

பல கெடுபிடிகளை விதித்திருக்கும் ராஜ குடும்பம், மேகன் மார்க்கெல்லுக்கு ஒரே ஒரு விதிமுறைக்கு மட்டும் விதிவிலக்கு அளித்திருக்கிறது.

ராஜ குடும்ப வழக்கப்படி அவர்கள் பொது இடத்தில் யாரையும் கட்டி அணைப்பது இல்லை. ஆனால் மேகன் மெர்க்கல் நடிகை என்பதால், துறை சார்ந்த விழாக்களில் மற்றவர்களை கட்டி அணைக்க அனுமதி வழங்கியிருக்கிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 2 =

*