;
Athirady Tamil News

ஊழல் செய்வதில் போட்டி வைத்தால் பாஜக அரசுக்கு தான் முதலிடம் – அமித்ஷா..!!

0

கர்நாட்கா மாநிலத்தில் வருகிற மே 12-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கியுள்ளன. இந்த நிலையில் நேற்று கர்நாடகாவிற்கு வருகை தந்த பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

அப்போது ஆவேசமாக பேசிய அவர், ‘ஊழல் நிறைந்த ஆட்சி எது என்று போட்டி வைத்தால், அதில் எடியூரப்பா அரசுக்குதான் முதலிடம் கிடைக்கும் என சமீபத்த்தில் ஒரு சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி கூறியுள்ளார்” என்று கூறினார்.

அமித்ஷா பேச்சை கேட்டு அருகில் அமர்ந்திருந்த எடியூரப்பா அதிர்ச்சி அடைந்தார். உடனே அமித்ஷா அருகில் இருந்த மற்றொரு பா.ஜ.க. தலைவர் அவர் செய்த தவறை சுட்டுக் காட்டினார். இதையடுத்து சுதாகரித்துக் கொண்ட அமித்ஷா உடனடியாக காங்கிரஸ் அரசுதான் என்று மாற்றி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + 8 =

*