;
Athirady Tamil News

பிப்ரவரி சரக்கு, சேவை வரி வசூல் ரூ.85,174 கோடி..!!

0

நாடு முழுவதும் ஒரே மறைமுக வரி என்ற பெயரில் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு சேவை வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது.

மாதம்தோறும் சரக்கு, சேவை வரி வசூல் நடந்து வருகிறது.

பிப்ரவரி மாதம் ரூ. 86 ஆயிரத்து 318 கோடி, சரக்கு, சேவை வரி வசூல் செய்யப்பட்டது. இந்த வசூல் ஜனவரி மாதத்துக்கான வரி ஆகும். இந்த மாதம், பிப்ரவரி மாதத்துக்கான சரக்கு, சேவை வரி வசூல் நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 26-ந் தேதி வரையில் வசூலான தொகை ரூ. 85 ஆயிரத்து 174 கோடி ஆகும்.

இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் ரூ.1,144 கோடி குறைவு. இதேபோன்று சரக்கு, சேவை வரி செலுத்துவோரில் 59 லட்சத்து 51 ஆயிரம் பேர் மட்டும், 25-ந் தேதி வரையில் கணக்கு தாக்கல் செய்து உள்ளனர்.

இது மொத்த வரி செலுத்துவோரில் 69 சதவீதம் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 4 =

*