;
Athirady Tamil News

திருவனந்தபுரம் அருகே ரேடியோ ஜாக்கி வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை..!!

0

திருவனந்தபுரம் அருகே உள்ள கிளிமானூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). இவர் மலையாள சினிமாவில் பாடல்கள் பாடி உள்ளார். மேலும் ரேடியோ ஜாக்கியாகவும், டி.வி. நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

கிளிமானூர் அருகே மடவூர் பகுதியில் ராஜேஷ் குமார் நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை பார்க்கும் ஸ்டூடியோவும் நடத்தி வந்தார். நேற்று இரவு அந்த பகுதியில் நடந்த ஒரு இசைக்கச்சேரியில் ராஜேஷ்குமார் தனது குழுவினருடன் பங்கேற்று பாடல்கள் பாடினார். அதன்பிறகு தனது உறவினர் குட்டன் என்பவருடன் ஸ்டூடியோவுக்கு சென்றார்.

அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. வெளிநாட்டில் உள்ள அவரது உறவுக்கார பெண் ஒருவர் போனில் பேசினார். அவருடன் பாடகர் ராஜேஷ்குமார் பேசிக்கொண்டிருந்த போது அவரது ஸ்டூடியோ முன்பு ஒரு கார் வந்து நின்றது.

அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேர் கும்பல் ஸ்டூடியோவுக்குள் புகுந்து ராஜேஷ்குமாரையும், குட்டனையும் வெட்டியது. இதனால் குட்டன் அலறியடித் துக்கொண்டு அங்கிருந்து வெளியில் ஓட்டம்பிடித்தார். தனியாக சிக்கிக்கொண்ட ராஜேஷ்குமாரை அந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு காரில் தப்பிச் சென்று விட்டது.

கொலை நடந்த ஸ்டூடியோ முன்பு பொதுமக்கள் திரண்ட காட்சி.

ராஜேஷ்குமாரின் அலறல் சத்தத்தை போனில் கேட்ட அவரது உறவுப்பெண் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து தனது உறவினர் மூலம் கிளிமானூர் போலீசுக்கு இந்த தகவலை தெரிவித்தார். போலீசார் உடனடியாக அந்த ஸ்டூடியோவுக்கு விரைந்து சென்றனர். அங்கு ராஜேஷ்குமார் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

போலீசார் அவரது பிணத்தை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த குட்டன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கொலை நடந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சினிமா பாடகர் ராஜேஷ் குமார் கொலைக்கான காரணம் பற்றியும், கொலையாளிகள் யார்? என்பதை கண்டுபிடிக்கவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + 1 =

*