கள்ளக்குறிச்சியில் 3-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை..!!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி குளத்துமேடு பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவர் அங்குள்ள தனியார் பார் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களது மகன் சரவணன் (வயது 26).
இவர்கள் அந்த பகுதியில் உள்ள 2-வது மாடியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். சரவணன் உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் 3-ம் ஆண்டு படித்துவந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு அறையில் படுத்திருந்த சரவணன் திடீரென்று எழுந்தார். பின்னர் அவர் சமையல் அறையில் இருந்த மண்எண்ணை கேனை எடுத்துக்கொண்டு 2-வது மாடியில் இருந்து 3-வது மாடிக்கு சென்றார். பின்னர் சரவணன் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உடலில் தீ பிடித்ததும் அவர் கூச்சல் போட்டுக்கொண்டு 3-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். தரையில் விழுந்த அவர் உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினரும் மற்றும் கருணாமூர்த்தியும் அங்கு ஓடிவந்தனர்.
உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து சரவணனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதற்குள் உடல் கருகி, ரத்தவெள்ளத்தில் மிதந்த சரவணன் பரிதாபமாக இறந்தார். தன் மகன் உடலை பார்த்து கருணாமூர்த்தி மற்றும் அவரது மனைவி லதா ஆகியோர் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சிபோலீசில் புகார் செய்யப்பட்டது. உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார்விரைந்து வந்து சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஐ.டி.ஐ. மாணவர் உடலில் தீ வைத்து, 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #Tamilnews