;
Athirady Tamil News

7 மாத கர்ப்பிணி மாணவியை கட்டாயப்படுத்தி நடனம் ஆட வைத்த ஆசிரியர்கள்..!!

0

சத்தீஸ்கர் மாநிலத்தில் கல்லூரி ஒன்றில் படித்து வந்த 7 மாத கர்ப்பிணியை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி நடனம் ஆட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24 வயதான Pratibha Minj என்ற மாணவி திருமணத்திற்கு பின்னர், B Ed படித்து வந்தார். படிக்கும்போதே கருவுற்ற இவர், கல்லூரியில் அனுமதியுடன் பயின்று வந்துள்ளார்.

பிரசவ நேரத்தில் மட்டும் இவருக்கு விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்நிலையில், கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இவரை நடனமாடுமாறு ஆசியர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

தனது நிலைமையை எடுத்துக்கூறியும், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த ஆசிரியர்கள், நடனம் ஆடாவிட்டால் உனது Practical Exam மதிப்பெண்களை குறைத்துவிடுவோம் என மிரட்டி, மாணவியை வற்புறுத்தி நடனம் ஆட வைத்துள்ளனர்.

இதனை எதிர்கொண்ட மாணவி, இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் எதுவும் அளிக்கவில்லை.

தனக்கு குழந்தை பேறு முடிந்தவுடன் கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து புகார் அளித்ததையடுத்து, பெண்ணின் பிரசவ நேரத்தில் அக்கறையின்றி நடந்துகொண்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − 2 =

*