;
Athirady Tamil News

முகமூடி அணிந்து போராடிய மாணவி;அறிக்கை கோரியது அதிகார சபை..!!

0

தனது தாய்க்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகக்கூறி கற்பதற்கான உரிமையை பறித்ததை எதிர்த்து முகமூடி அணிந்து போரட்டம் நடத்திய மாணவி தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பணிப்புரை விடுத்துள்ளது.

கம்பஹா கனேமுல்ல பொலிஸாருக்கு இந்த பணிப்புரையை அதிகார சபை விடுத்திருக்கின்றது.

கனேமுல்ல குடா பெல்லன ஸ்ரீ சுமங்கல வித்தியாலயத்தின் தரம் ஐந்தில் கல்விகற்கும் மாணவி முகமூடி அணிந்துகொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை கம்பஹா வலயக் கல்விப் பணிமனைக்கு முன்பாக போராட்டம் நடத்தியிருந்தார்.

குறித்த மாணவியின் தாயாருக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாகவும் அதனால் மாணவியை பாடசாலைக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பாடசாலை நிர்வாக அதிகாரிகள் தடைவிதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்தே குறித்த மாணவி போராட்டம் நடத்தியுள்ளார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் இதே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மாணவி முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டை விசாரணை செய்த மனித உரிமைகள் ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட பாடசலை அதிபரை அழைத்து, மாணவியை மீண்டும் பாடசாலைக்கு இணைத்துக் கொள்ளும்படி கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.

எனினும் மீண்டும் அதே குற்றச்சாட்டு குறித்த மாணவி மீது சுமத்தப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

குறித்த மாணவி இந்த வருடம் நடைபெறவுள்ள ஐந்தாம் தரத்திற்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் என்பதோடு ஒவ்வொரு வருடமும் தவணைப் பரீட்சைகளில் முதலாவது இடத்தையே வகித்து வந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குருநாகல் மாவட்டத்தில் இப்பாகமுவ பகுதியில் எயிட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்து புறக்கணிக்கப்பட்ட பாடசாலை மாணவன் ஒருவர் தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து தலையீடு செய்த மனித உரிமை ஆர்வலர்கள் கல்வியமைச்சின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவனுக்கு கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்விகற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டதோடு அவருக்கான சகலவித நலன்திட்டங்களும் வழங்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + fifteen =

*