;
Athirady Tamil News

பாகிஸ்தானில் நண்பருடன் திருநங்கை சுட்டுக்கொலை..!!

0

மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கையர்களுக்கு முதன்முதலாக சட்ட அங்கீகாரம் அளித்த நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தானும் உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் திருநங்கையர்களுக்கு மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அரசு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இங்குள்ள கைபர்-பக்துங்வா மாகாணத்துக்குட்பட்ட பெஷாவர் நகரில் நேற்று தனது ஆண் நண்பருடன் ரிக்‌ஷாவில் சென்று கொண்டிருந்த ஒரு திருநங்கையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.

இந்த தாக்குதலில் உயிரிழந்த திருநங்கை மற்றும் அவரது நண்பரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கைபர் மருத்துவ கல்லூரிக்கு அனுப்பிவைத்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். #tamilnews

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + eleven =

*