;
Athirady Tamil News

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம்- டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு..!!

0

சிபிஎஸ்சி. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடத்திற்கான தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த திங்கட் கிழமை நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.

கேள்வித்தாள் வெளியான குற்றச்சாட்டை சிபிஎஸ்இ மறுத்திருந்த நிலையில், மறுதேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ-யின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’12ஆம் வகுப்பு பொருளாதாரவியல், 10ஆம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும். தேர்வு நடத்தப்படும் தேதி மற்றும் மற்ற தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்’ என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

மேலும், சிபிஎஸ்இ வினாத்தாளில் சில பகுதிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளன, வினாத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மந்திரி ஜவடேகர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − nine =

*