;
Athirady Tamil News

பிரதேச சபை உறுப்பினர்கள் இடையில் மோதல் – ஐவர் வைத்தியசாலையில்..!! (படங்கள்)

0

நோர்வூட் நகரில் இடம்பெற்ற குழு மோதலில் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உட்பட ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தினருக்குமிடையிலே நேற்று (28) மாலை 6 மணியளவில் மோதல் இடம்பெற்றுள்ளது.

மோதல் சம்பவத்தின் போது மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் வாகனமும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வாகனமும் சேதமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் சம்பவத்தினால் பாதிப்படைந்த நோர்வூட் பிரதேச சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பனரான சூசை அலக்சான்டர் என்.ராமச்சந்திரன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் பா.சிவனேசன் உட்பட ஆதரவாளர்கள் இருவருமாக ஐவர் டிக்கோயா மாவட்ட வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்படுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + fourteen =

*