;
Athirady Tamil News

கண்டி வன்முறை: மஹிந்த ஆதரவாளர் கைது..!!

0

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குண்டசாலை பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கண்டி சம்பவம் தொடர்பாக பல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கண்டி தெல்தெனிய பகுதியில் அண்மையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனங்களுக்கிடையிலான வன்முறையின் காரணமாக உயிர் சேதங்களுடன், பல சொத்து சேதங்களும் இடம்பெற்றிருந்தது.

இதனால் நாடு முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்;டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 5 =

*