;
Athirady Tamil News

குதிரையில் வருபவர்களுக்கு உணவில்லை: மறுத்த மெக்டொனால்ட் உணவகம்..!!

0

பிரித்தானியாவின் Norfolk பகுதியில் மெக் டொனால்ட் உணவகத்திற்கு குதிரையில் வந்து உணவு ஆர்டர் செய்தவரை ஊழியர்கள் வெளியேறும்படி கேட்டுக்கொண்ட வேடிக்கையான சம்பவம் நடைபெற்றுள்ளது.

Norfolk பகுதிலுள்ள Beccles நகரின் மெக் டொனால்ட் உணவகம் ஒன்றிற்கு குதிரையில் வந்து உணவு ஆர்டர் செய்தவரைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வாகனங்களில் மட்டுமே வந்து உணவு ஆர்டர் செய்யும் பகுதியில் திடீரென்று ஒருவர் குதிரையுடன் வந்தது கண்டு என்ன செய்வதென்று விழித்த ஊழியர்கள் பின்னர் தங்கள் மூத்த அதிகாரியை அழைத்தனர். அவர் வந்து குதிரையில் வந்தவரை வெளியே அனுப்பினார்

வெளியே சென்ற அந்த மனிதர் குதிரையை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு பின்னர் உணவகத்தினுள் சென்று ஒரு காபியை வாங்கிக் கொண்டு வந்து தன் குதிரையில் ஏறிச்சென்றார்.

இதேபோல் 2013 ஆம் ஆண்டு Emily Edon மற்றும் Kayleigh Jeremy என்னும் இருவர் 7 மணி நேர குதிரைப் பயணத்திற்குப்பின் மெக் டொனால்ட் உணவகத்திற்கு குதிரையில்வந்து உணவு ஆர்டர் செய்தபோது அவர்களையும் உணவகம் திருப்பி அனுப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 11 =

*