;
Athirady Tamil News

சொந்த பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயார்: அதிர்ச்சி காரணம்..!!

0

பாகிஸ்தானில் இளம் தாயார் ஒருவர் கடும் மன அழுத்தம் காரணமாக தமது 3 பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் குறித்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி பிலால் ஜாபர், குறித்த பெண்ணின் முன்னங்கைகளில் வெட்டுப்பட்டதன் காயம் இருந்தது.

அவரது காதலனே 3 பிள்ளைகளையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

ஆனால் குறித்த பெண்ணின் காதலனை அழைத்து விசாரித்த பொலிசாருக்கு உண்மை தெரிய வந்தது.

குறித்த பெண் 7 ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து பெற்றவர் எனவும், பொருளாதார ரீதியாக மிகவும் பிரயாசைப்பட்டு வந்துள்ளார் எனவும் முஸ்தபா என்ற அந்த நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி சம்பவத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், மன அழுத்தம் காரணமாகவே அவர் இந்த கொலையை செய்திருக்கலாம் எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிசார் குறித்த பெண்மணியை மேலும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + sixteen =

*