;
Athirady Tamil News

விமானியின் பொறுப்பற்ற செயல்: விமான நிலையத்தில் தவித்த பயணிகள்..!!

0

ஜேர்மனியில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய விமானியால் அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகள் தத்தளித்துள்ளனர்.

ஜேர்மனியில் இருந்து போர்த்துகல் தலைநகர் லிஸ்பனுக்கு 106 பயணிகளுடன் புறப்பட தயாரான நிலையில் இருந்தது போர்த்துகல் விமானம் ஒன்று.

ஆனால் விமானி பொறுப்பற்ற முறையில் அதிக அளவு மது அருந்தி வந்ததால் கடைசி நிமிடத்தில் குறித்த விமானத்தை நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

இதனால் சுமார் 106 பயணிகள் ஜேர்மனியின் Stuttgart விமான நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

வெள்ளி இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. குறித்த விமானத்தின் துணை விமானி தள்ளாடியபடி நடந்து செல்வதையும் அதிக மது வாடை எழுந்ததையும் அறிந்த விமான நிலைய ஊழியர் ஒருவர் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக விமானத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.

மட்டுமின்றி குறித்த விமானியை உடனடியாக கைதும் செய்துள்ளனர். மேலும் லிஸ்பன் செல்லவிருந்த 106 பயணிகளையும் அன்றிரவு அங்குள்ள ஹொட்டலில் தங்க வைத்துள்ளனர்.

மேலும் குறித்த பயணிகள் அனைவரும் எதிர்வரும் திங்கள் அன்றே லிஸ்பன் செல்ல முடியும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − five =

*