மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி..!!

பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உடநுவர 6 ஆம் கட்டை பிரதேசத்தை சேர்ந்த கலணி பெருமால் வினோத எனும் 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 9.55 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுள்ளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மோட்டார் வாகனம் ஒன்றை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பில் பேருந்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் ஹாலிஎல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.