;
Athirady Tamil News

கடும் காற்றுடன் கூடிய பெய்த அடை மழையினால் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

0

தலவாக்கலை – நானுஓயா தோட்ட பிரிவில் நேற்று மாலை கடும் காற்றுடன் கூடிய பெய்த அடை மழையினால் குடியிருப்புக்களின் கூரைத் தகடுகள் அள்ளூண்டு போய்யுள்ளதுடன் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதே வேளை வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததினால் குறித்த வீடு பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மழை நீர் வழிந்தோடியதால் வீடுகளில் இருந்த உடமைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உபகரணங்கள் சேதமாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50ற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க தோட்டநிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 2 =

*