;
Athirady Tamil News

சீனாவில் தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொருட்களை விற்றவர் கைது..!!

0

சிறுவர்கள் விரும்பி உண்ணும் சிற்றுண்டி வகைகளின் வடிவத்தை போன்று தயாரிக்கப்படும் மின்சார விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் இன்று (29) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொழும்பில் உள்ள பிரசித்தி பெற்ற பாடசாலை ஒன்றிற்கு அருகில், இந்த மின்சார விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். குறித்த விளையாட்டு பொருட்களில், 12 வோட் அளவில் மின்சாரம் உற்பத்தியாவது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்விளையாட்டு பொருட்கள் சீனாவில் தயாரிக்கப்படுவதாகவும், இவற்றை கொழும்பு புறக்கோட்டை – சீன வீதியில் உள்ள மொத்த வர்த்தக கொள்வனவாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதும், பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன்படி சந்தேகநபருக்கு 10,000 ரூபாய் அபராதமும் மற்றும் தொகை விற்பனையாளருக்கு 30,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 5 =

*