;
Athirady Tamil News

ஜேர்மனியில் முழுவதுமாக தீயில் எரிந்த வீடு: தப்பித்த குடும்பத்தார்..!!

0

ஜேர்மனியில் உள்ள ஒரு வீடு முழுவதுமாக தீப்பற்றி எரிந்த நிலையில் வீட்டுக்குள் இருந்த நபர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

பெர்லினில் அமைந்துள்ள ஒரு வீட்டில் நேற்று அதிகாலை 1.40 மணிக்கு தீப்பிடித்து எரிந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க போராடினார்கள்.

குறித்த வீட்டுக்குள் இருந்த மூன்று பேர் உடனடியாக வீட்டை விட்டு தாங்களாகவே வெளியேறிய நிலையில் வீடானது முழுவதும் எரிந்து சாம்பலானது.

தீயனது வீட்டின் முதல் மாடியில் பற்றி எரிய தொடங்கியிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரி ஸ்டீவ் வஸ்னியா கூறியுள்ளார்.வீடு தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − two =

*