;
Athirady Tamil News

பிரான்ஸில் யூத மூதாட்டி படுகொலை: மத வெறியர்கள் அடாவடியா?..!!

0

பிரான்ஸில் யூத மூதாட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மைரேலி நொல்(Mireille Knoll) என்ற 85 வயது மூதாட்டி தனிமையில் வசித்து வந்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின்போது நாடு கடத்தலில் இருந்து தப்பித்த குறித்த மூதாட்டி, பாரிஸில் வசிக்க தொடங்கியுள்ளார்.

பின்னர் கடந்த 2000-ஆம் ஆண்டு குறித்த மூதாட்டியின் கணவர் இறந்துவிட்டதால் தனிமையில் வசித்து வந்த நிலையில், வீட்டிற்குள் புகுந்த சிலர் சரமாரியாக தாக்கியுள்ளனர், இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து நாட்டின் வெளி விவகாரத்துறை அமைச்சர் கூறுகையில், யூத மதத்திற்கு எதிரான சிலரால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பது வருத்ததை ஏற்படுத்துகிறது, இந்த நிலை நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், இரண்டு நபர்களை கைது செய்துள்ளனர்.

யூதர்களின் புகலிடமாக விளங்கும் பிரான்ஸில் அடிக்கடி நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்களை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + five =

*