;
Athirady Tamil News

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவியுங்கள்: இரணுவத்தளபதியிடம் சி.வி. கோரிக்கை..!!

0

யாழ் மாவட்டத்தில் இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்கவிடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்

கைதடியிலுள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில், இன்று (வியாழக்கிழமை) இருவருக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வர் இந்த கோரிக்கையை இரணுவத்தளபதியிடம் முன்வைத்தார்.

இதன்போது தாம் சாதகமாக பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக இராணுவத்தளபதி முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், இந்த கலந்துரையாடலின் போது பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + seventeen =

*