;
Athirady Tamil News

மகனை கொடூரமாக கொன்றுவிட்டு நாடகமாடிய தாய்: விசாரணையில் வசமாக சிக்கினார்..!!

0

பிரான்ஸில் பெற்ற மகனை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் பொலிஸ் விசாரணையில் வசமாக சிக்கியுள்ளார்.

பிரான்ஸின் Saône-et-Loire பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவர், தன் மகனை திருடர்கள் கொலை செய்து விட்டதாக கடந்த பிப்ரவரி 4-ஆம் திகதி இரவு அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், 15 வயதான குறித்த சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர்.

ஆனால், பிளாஸ்டிக் கவர் மூலம் முகத்தை மூடி சிறுவன் கொலை செய்யப்பட்டுள்ளதால் சந்தேகமடைந்த பொலிசார் தாயிடம் இருந்தே விசாரணையை தொடங்கியுள்ளனர்.

விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தது மட்டுமின்றி மகன் இறந்த பதற்றம் சிறிதளவும் இல்லாமல் இருந்ததால் குறித்த பெண்ணை காவலில் எடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், இந்த வார இறுதி விசாரணை தொடரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்படும் என்றும் பொலிசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 19 =

*