;
Athirady Tamil News

இயல்பான நடவடிக்கையை தவறாக புரிந்து கொண்ட சக ஊழியர்கள்: வேலையை இழந்த பரிதாபம்..!!

0

கனடாவில், தனது இயல்பான நடவடிக்கையை சக ஊழியர்கள் தவறாக புரிந்து கொண்டதால், வேலையை இழந்த பிரெஞ்சு ஊழியர், தான் பணிபுரிந்த ஓட்டலின் மீது புகார் அளித்துள்ளார்.

கனடாவின் Vancouver நகரில் உள்ள உணவகம் Milestones. இந்த உணவகத்தில் Guillaume Rey என்ற பிரெஞ்சு நபர் ஒருவர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், தான் பணியாற்றிய உணவகத்தின் மீது மனித உரிமைகள் நீதிமன்றத்தில் Rey புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, முறையான காரணமின்றி தன்னை வேலையில் இருந்து அந்த உணவகம் நீக்கியுள்ளதாக, அந்த புகாரில் Rey தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, Rey-யின் இந்த புகாரை தள்ளுபடி செய்யுமாறு Milestones உணவகத்தின் சார்பில், மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் உறுப்பினரான Devyn Cousineau அந்த மனுவை நிராகரித்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், Guillaume Rey சக ஊழியர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகக் கூறி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆனால், பிரெஞ்சு நபரான அவரின் இயல்பான குணமே அது தான் என்றும், அதனால் சக ஊழியர்கள் தவறாக புரிந்து கொண்டதால் Rey பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

எனினும், Rey தனது பணியில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும், வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார். ஆனால், பலமுறை சக ஊழியர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2016ஆம் ஆண்டு Rey பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மனித உரிமை நீதிமன்ற உறுப்பினர், புகாரை தள்ளுபடி செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + seventeen =

*