;
Athirady Tamil News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்! இன்று அதே மருத்துவமனையில் மருத்துவராக..!!

0

பிரித்தானியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் இருபது ஆண்டுகளுக்கு பின்னர், தற்போது மருத்துவராக பணியாற்றும் சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

ஜேன் ப்ராட்(31) எனும் பெண் பிரித்தானியாவில் உள்ள செயின்ட் பால் எனும் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார்.

அவர் சிறுமியாக இருந்த போது அவருக்கு எலும்பு புற்றுநோய் தாக்கியது, அதனால் சிகிச்சை பெற செயின்ட் பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மருத்துவர்கள் அவரது காலில் இருந்த புற்றுநோய் கட்டிக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்த பின்னர் ஜேன் ப்ராட் குணமடைந்தார்.

சுமார் ஒரு வருட காலம் கீமோதெரபி சிகிச்சை பெறும் போதே, இதே போல் பாதிக்கப்பட்ட பல குழந்தைகளுக்கும் உதவ வேண்டும் என்ற உயரிய எண்ணம் அந்த சிறு வயதிலேயே அவருக்கு ஏற்பட்டது.

புற்றுநோயில் இருந்து முழுதும் நலம் பெற்ற பின்னர் ஜேன் ப்ராட் மருத்துவம் பயின்று மருத்துவரானார். இருப்பினும் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அவரின் சிறுவயது எண்ணத்தை மறக்காமல் அதை செயல்படுத்த மேக்-ஏ-விஷ் (Make-A-Wish) எனும் தொண்டு நிறுவனத்தை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் மூலம் நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறும் பல குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கி வருகிறார்.

தன்னுடைய தன்னம்பிக்கை வாழ்க்கையை பற்றிய பேசிய மருத்துவர் ஜேன் ப்ராட், என் காலில் இருந்த புற்றுநோய்கட்டியை அகற்றுவதற்காக கீமோதெரபி மற்றும் அறுவை மூலம் ஒரு வருடமாக சிகிச்சை பெற்றேன்.

அப்போது நான் குணமடைந்தால் எண்ணைப் போல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்று எண்ணினேன்.

அதற்காக தொடங்கப்பட்டது தான் இந்த மேக்-ஏ-விஷ் எனும் தொண்டு நிறுவனம். இதன் பல பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*