;
Athirady Tamil News

ஜேர்மனியிலிருந்து அகதிகளை நாடு கடத்துவதில் சிக்கல்..!!

0

2017 ஆம் ஆண்டில் முறையான ஆவணங்கள் இல்லாததால் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் புகலிடம் மறுக்கப்பட்டோர் மற்றும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஜேர்மனியில் அதிகரித்துள்ளதாக ஜேர்மன் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

அதிகாரிகள் புகலிடம் மறுக்கப்பட்டோர் மற்றும் புலம் பெயர்ந்தோரின் பயண ஆவணங்களைப் பெற கடுமையாகப் போராட வேண்டியுள்ளது.

2016 ஆம் ஆண்டில் 38,000 ஆக இருந்த திருப்பி அனுப்பப்பட இயலாமல் உள்ள புகலிடம் மறுக்கப்பட்டோர் மற்றும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2017 ஆம் ஆண்டில் 71 சதவிகிதமாக அதாவது 65,000 ஆக உயர்ந்துள்ளது.

அந்த அறிக்கை இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் ஒத்துழைப்பு மோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.இந்தியாவைப் பொருத்தவரையில் பாஸ்போர்ட்டுகளை பதிலீடு செய்யும் நடைமுறைகள் இல்லை அல்லது மிகவும் மெதுவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பாஸ்போர்ட்டுகளை பதிலீடு செய்யும் முறைகள் இருக்கின்றன, ஆனால் அவை மிகவும் தாமதமாகத்தான் செயல்படுத்தப்படுகின்றன.

லெபனானில் கோரிக்கைகள் பொதுவாக பதிலளிக்கப்படுவதில்லை, தூதரகத்தை தொடர்பு கொள்வதே கடினம துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் ரஷ்யாவிலும் திருப்பி அனுப்பப்பட இயலாமல் உள்ள புகலிடம் மறுக்கப்பட்டோர் மற்றும் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

3,800 பேர் எந்த நாட்டவர்கள் என்பதே தெரியவில்லை. புகலிடம் மறுக்கப்பட்டோரில் பாதிபேர் தங்களுக்கு ஜேர்மனியில் ஏன் புகலிடம் மறுக்கப்படுகிறது என்பதைக் கேள்வி கேட்கிறார்கள்.

ஐரோப்பிய யூனியனிலுள்ள நாடுகளிலேயே ஜேர்மனிதான் அதிக புகலிடக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 15 =

*