;
Athirady Tamil News

மஹிந்­தவின் செய­லாளர் குமா­ர­சிறி ஏன் பிரதி பொலிஸ் மா அதி­பரை சிறையில் சந்­தித்தார்.?..!!

0

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரா­ளு­மன்ற விவ­கார செய­லாளர் குமா­ர­சிறி ஹெட்­டிகே, சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவின் படுகொலை தொடர்­பி­லான விவ­கா­ரத்தில் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கா­ரவை உரிய முறை­மை­க­ளுக்கு அப்பால் சென்று சந்­தித்­துள்­ள­மை­யா­னது, அங்கு தகவல் பறி­மாற்றம் ஒன்று இடம்­பெ­று­கி­றது அல்­லது சந்­தேக நப­ருக்கு ஏதோ அழுத்தம் பிர­யோ­கிப்­ப­டு­கி­றது என தாம் சந்­தே­கிப்­ப­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு நேற்று கல்­கிசை நீதி­வா­னுக்கு அறி­வித்­தது.

லசந்த விக்­ர­ம­துங்க படு கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று கல்­கிசை பிர­தான நீதிவான் மொஹம்மட் மிஹால் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்த போது, குற்றப் புல­னாய்வு பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பீ.எஸ். திஸேரா, பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா, பொலிஸ் பரி­சோ­தகர் சுதத் குமாரா ஆகி­யோரைக் கொண்ட சிறப்புக் குழு இதனை நீதி­வா­னுக்கு அறி­வித்­தது.

நேற்­றைய தினம் வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது, இவ்­வி­வ­கா­ரத்தில் பிணையில் உள்ள இரா­ணுவ புல­னாய்வு சார்ஜன்ட் மேஜர் உத­லா­கம மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்தார். அத்­துடன் சிறை அதி­கா­ரிகள் ஊடாக விளக்­க­ம­றி­யலில் உள்ள , 3 ஆம் சந்­தேக நப­ரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கார ஆஜர்ச் செய்­யப்­பட்டார். 2 ஆம் சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் திஸ்ஸ சுகந்­த­பால, மேல் நீதி­மன்றில் வழக்கில் ஆஜ­ரா­கி­யொ­ருந்­ததால் நேற்று மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை.

இந் நிலையில் மன்றில் நேற்று கருத்­துக்­களை முன்­வைத்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பி.எஸ். திஸேரா, லசந்த விக்­ர­ம­துங்க விவ­கா­ரத்தில் இரா­ணு­வத்தின் 112 ஆவது கட்­டளைப் பிரிவில் கட­மை­யாற்­றிய 18 வீரர்­க­ளிடம் நாம் விசா­ரணை செய்தோம். அத்­துடன் கல்­கிசை பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் உள்ள வாக்கு மூலங்கள் மாற்­றப்­பட்டு சாட்­சி­யங்கள் அழிக்­கப்­பட்­டமை தொடர்பில் பொலிஸ் காண்ஸ்­ட­பி­ளான தயா­சிரி என்­ப­வ­ரிடம் விசா­ரணை செய்தோம். அவர் தான் உண்மை வாக்கு மூலத்தை எழு­தி­யவர். அவ­ரிடம் பொலிஸ் பதிவுப் புத்­த­கத்­தையும், கிழித்து நீக்­கப்­பட்ட உண்மை வாக்கு மூலங்கள் அடங்­கிய பக்­கங்­க­ளையும் காட்டி விசா­ரணை செய்த போது அவர் அவற்றை அடை­யாளம் கண்டு வாக்கு மூலம் அளித்தார்.

அவர் இட்ட பதி­வுகள் எதுவும் தற்­போது பொலிஸ் பதிவுப் புத்­த­கத்தில் உள்ள மாற்றம் செய்­யப்­பட்ட பதி­வு­களில் இல்லை என்­பதை அவர் உறுதி செய்தார்.

இத­னை­விட லசந்த விவ­காரம் தொடர்பில் விசா­ரணை செய்த மிரி­ஹான விஷேட விசா­ரணைப் பிரிவின் அப்­போ­தைய பொறுப்­ப­தி­க­ரி­யாக இருந்த பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அம­ர­பந்­து­விடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில், லசந்­தவின் களக் குறிப்புப் புத்­தகம் 2009.01.16 அன்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண்­யக்­கா­ர­விடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­மையும், அதன்­போது அங்கு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ஹேமந்த அதி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பால ஆகியோர் இருந்­த­மையும் உறு­தி­யா­கி­யுள்­ளது.

இத­னை­விட தற்­போது இவ்­வி­வ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண்­யக்­கா­ர­வுக்கும், பொலிஸ் பரி­சோ­தகர் சுகந்­த­பா­ல­வுக்கும் சிறையில் விஷேட பாது­க­ப­ப­ளிக்க நாம் கோரி­யி­ருந்தோம்.

ஏனெனில் கடந்த 2011.10.15 அம் திகதி லசந்த விவ­கா­ரத்தில் கைதாகி சிறையில் இருந்த சந்­தேக நப­ரான பிச்சை ஜேசு­தாசன் மர்­ம­மாக உயி­ரி­ழந்தார். இந்த பின்­ன­னியில் பாது­காப்பை நாம் பலப்­ப­டுத்த கோரினோம்.

கடந்த 26 ஆம் திகதி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்ன நாண­யக்­கா­ர­விடம் விசா­ரணை நடாத்த சிறைக்கு சென்­றி­ருந்தார். அப்­போது அங்கு வந்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் பாரா­ளு­மன்ற விவ­கார செய­லாளர் குமா­ர­சிறி ஹெட்­டிகே எந்த உரிய முன் அறி­வித்­தலும் இன்றி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிர­சன்­னவை சந்­தித்­துள்ளார்.

சிறையில் துமிந்த சில்­வாவை சந்­திப்­ப­தற்­காக அனு­மதி பெற்று சிறைக்குள் வந்­துள்ள அவர் இவ்­வாறு பிர­சன்ன நாண்­யக்­கா­ரவை சந்­தித்­த­மை­யா­னது, சிரையில் இருந்து தகவல் பறி­மாற்றம் இடம்­பெ­று­கின்­றதா அல்­லது சந்­தேக நப­ருக்கு அழுத்­தங்கள் ஏதும் பிர­யோ­கிப்­ப­டு­கின்­ற­னவா என எம்­மி­டையே சந்­தே­கங்­களை தோற்­று­வித்­துள்­ளது. இது தொடர்பில் அவதானம் தேவைப்படுகின்றது. என்றார்.

இந் நிலையில் லசந்த விவகாரத்தில் ஏர்கனவே வெளி நாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமந்த அதிகாரியின் பயணத் தடை அவரது சட்டத்தரணி துலிந்து சரத் சந்ரவின் கோரிக்கைக்கு அமைய நீக்கப்ப்ட்டது.

அதன்படி விளக்கமறியலில் உள்ள இரு சந்தேக நபர்களின் விளக்கமரியலும் எதிர்வரும் ஏப்ரல் 9 வரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × two =

*